பட்டம் பற பற... பறக்க விடுவது பட்டத்தை மட்டுமல்ல.. நம் கவலைகளையும் தான்.! - Seithipunal
Seithipunal


பட்டம் விடுவது என்பது நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும். பலவிதமான வண்ணங்களில் பட்டம் செய்து அதை பறக்க விடும் பொழுது நாமே பறப்பது போன்ற பரவசமும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால் இந்த கால தலைமுறைக்கு அத்தகைய மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு நேரமில்லை. காரணம், அவர்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான ஓய்வு நேரங்களை சமூக வலைத்தளங்களே ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

தற்போதைய சூழ்நிலையை சற்று மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள நாம் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு சிறிது நேரம் ஒதுக்கி மகிழ்வோம்.

பட்டம் செய்வது எப்படி?

கீழே உள்ள படத்தில் காண்பித்தப்படி சீவங்குச்சிகளை வளைத்து ஒட்டிக் கொள்ளவும். பின்னர் அதன் நீளத்திற்கு ஏற்றவாறு காகிதம் அல்லது வண்ணத்தாள்களை கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.

பின்னர் பட்டத்தின் ஒரு முனையில் மெலிதான துணியைக் கட்டிக் கொள்ளவும். இது பார்ப்பதற்கு பட்டத்தின் வால் போன்று தோற்றமளிக்கும். அந்த முனையின் எதிர் முனையில் பறக்கவிடும் நூலைக் கட்டிக் கொள்ளவும். இப்பொழுது உங்கள் பட்டம் பறப்பதற்கு தயாராகி விட்டது. நீங்கள் வால் இல்லாத பட்டத்தையும் பறக்க விடலாம். இப்பொழுது ஆன்லைனிலும் வண்ண வண்ணப் பட்டங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

எப்படி விளையாடுவது?

காற்றடிக்கும் போது பட்டத்தை மேலே பறக்கவிடவும், காற்றின் விசையால் உந்தப்பட்டு பட்டம் மேலே பறக்கும்.

அப்பொழுது நூலைச் சுண்டி பட்டத்தை அங்குமிங்கும் அலையவிட்டு வேடிக்கை பார்த்து நீங்கள் மகிழலாம். விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற போட்டி போட்டுக் கொண்டு யாருடைய பட்டம் அதிக உயரத்தில் பறக்கிறது என்று பார்க்கலாம்.

பட்டங்களின் வகைகள் :

கடதாசிப் பட்டம்

பெட்டிப் பட்டம்

கொக்குப் பட்டம்

பிராந்துப் பட்டம்

விண்பூட்டிய பட்டம்

பட்டம் விடும் திருநாள் :

இக்காலத்தில் பட்டம் விடும் உலகத் திருநாளே நடைபெறுகிறது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் (மகர சங்கராந்தி) அன்று (ஜனவரி 14 அல்லது 15) இந்த உலகத் திருவிழா நடைபெறுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துக் கொண்டு பட்டம் விட்டு மகிழ்வர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hoe to do kite


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->