நாட்டின் முன்னேற்றத்திற்கு துணையாக இருக்கும்., பொறியாளர்கள் தினம் இன்று..! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட்டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர், மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவர் வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க நீர்த்தேக்கத்தில் வெள்ளத்தடுப்பு அமைப்பு முறையை (றநசை றயவநச கடழழனபயவநள) உருவாக்கினார். ஆங்கில அரசின் சர் பட்டமும், பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார். இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 100வது வயதில் (1962) மறைந்தார்.

உலக லிம்போமா விழிப்புணர்வு தினம்:

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. லிம்போமா என்பது ஒரு வகை ரத்த புற்றுநோயாகும். லிம்போமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச மக்களாட்சி தினம்

ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஆம் தேதியை அறிவித்தது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

engneerday special 15 September


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal