இப்படியொரு இனம் இதுவரையில் பிறந்ததில்லை... இனி பிறக்கவும் சாத்தியமில்லை: சங்க தமிழை தோண்ட வந்து, உலக வரலாறே மாறுமென்று அதிர்ந்த ஆய்வாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


சங்கப் பாடல்களால் தமிழை வளர்த்த மதுரை..!!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை நகர் எப்படி இருந்தது என்பதை தற்போதும், கடந்த இரண்டு வருடங்களாக கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியிலும் கண்டறியப் பட்டது.

சங்க கால கட்டிடங்களும், உறை கிணறுகளும், கொதி கலன் ஊது உலைகளும், பிற தேசத்தவருடன் பாண்டிய நாடு கொண்டிருந்த கடல் வாணிபத்தின் பயனால், பல நாட்டின் பழமையான பொருள்களும், பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஏராளமான மண்பானை ஓடுகளும் கிடைத்தன.

இவற்றைக் கொண்டு ஓரளவு, சங்க கால நாகரிகத்தை நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்கும் முன்னால் மதுரை எப்படி இருந்தது, என்பதை நம் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால்,  அவரவருக்கேற்றவாறு கற்பனை ஓவியங்கள் விரிவடையும்.

இதற்கு உறுதணையாக இருப்பது, பழமையான  இலக்கியங்கள் தான். அவற்றின் வாயிலாகத் தான் தொன்மையான மதுரையைப் பற்றியும், இங்கு அமைக்கப் பட்ட சங்கங்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சார்ந்த இலக்கணியான காத்யாயனார் சேர, சோழ, பாண்டியரைக் குறிப்பிடுகிறார். இலங்கையின் வரலாற்றைச் சிறப்பித்துக் கூறும் மகாவம்சத்தில், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனடைய மகளை, இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த விஜயன் என்ற மன்னர் மணந்து கொண்டார் என்ற செய்தியைக் குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே நட்பு வட்டாரத்தைத் தாண்டி உறவு முறையிலும், நீடித்திருப்பதையும் நம்மால் உணர முடியும்.

மேலும் தமிழை வளர்த்த சங்க காலம் பற்றிய அரிதான குறிப்புகளும் கிடைத்துள்ளன. மூன்று சங்கங்களின் வரலாற்றைப் பற்றி, இறையனார் அகப்பொருள் உரை என்ற நூல் தான் முதன் முதலாக விரிவாகக் கூறுகிறது.

இறையனார் என்பவரால் இயற்றப் பட்ட அகப்பொருள் சூத்திரங்களுக்கு நக்கீரர் உரை எழுதி உள்ளார். இந்த விளக்க உரை, பல தலைமுறைகளாக, வாய் மொழியாகவே கற்பிக்கப் பட்டு வந்திருக்கிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான், முசிறியில் வாழ்ந்த நீலகண்டன் என்பவர் தான் இறையனாரின் உரைக்கு எழுத்து வடிவம் தந்தார். முதற் சங்கத்தில், அகத்தியர் தலைமயில் 549 புலவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.


    காய்ச்சின வழுதி முதலாகவும், கடுங்கோன் மன்னனைத் தொடர்ந்து வாரிசுகளாக, 89  மன்னர்கள் முதற் சங்கத்தை ஆதரித்து வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இது தென் மதுரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. பின் இந்த இடம் கடலால் சூழப் பட்டதால், அவ்விடம் மூழ்கியது. இடைச் சங்கம் எனப்படும் இரண்டாம் சங்கத்தில், தொல்காப்பியர் உட்பட 59 பேர் சங்கப் புலவர்களாக இருந்துள்ளனர்.

இந்தச் சங்கம் அமைந்த இடம் கபாடபுரம் என்றழைக்கப் பட்டது. பின்னாளில் இந்த இடமும், கடல் நீரால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது. கடைச் சங்கம் எனப்படும் மூன்றாம் சங்கம், மதுரையில் அமைந்தது.

முடத்திருமாறன் என்ற மன்னனில் துவங்கி, உக்கிரப் பெருவழுதிப் பாண்டியனின் தலைமுறையினரால் இச்சங்கம் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த சங்கத்தில் 49 பேர் சங்கப் புலவர்களாக இருந்துள்ளனர்.


    எட்டுத் தொகை நூல்களும், கூத்தும் வரியும், சிற்றிசையும், பேரிசையும், இந்த சங்கத்தில் அரங்கேறின. சங்க கால இலக்கியப் பாடல்கள் அனைத்தும், சமரசப் பதிப்பில் அடங்கியுள்ளன. இதன்படி, சங்கப் பாடல்களின் எண்ணிக்கை 2381.

இவற்றில் 1861 பாடல்களை 473 ஆசிரியர்கள் இயற்றியுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் நூறு பாடல்களுக்கு மேல் பாடியுள்ளனர். இவர்கள் தான் ஐங்குறுநூற்றைப் பாடியவர்கள்.

இது தவிர, கபிலர் 235, அம்மூவனார் 127, ஓரம் போகியார் 110, பேயனார் 105, ஓதலாந்தையார் 103, அவ்வையார் 59, நல்லந்துவனார் 40, நக்கீரர் 37, உலோச்சனார் 35,  மாமூலனார் 30, என்று ஒவ்வொருவரும் மிகுதியான பாடல்களை இயற்றிப் பாடியுள்ளனர். தமிழ் கடலில் கிடைத்த அரிய வகை முத்துக்கள் தான் மேற்காணும் இலக்கியங்கள்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hence the age is known as 'Sangam Age', which extends roughly between 300 B.C. and 300 A.D. According to Tamil legends, there existed three Sangams (Academy of Tamil poets) in ancient Tamil Nadu popularly called Muchchangam. These Sangams flourished under the royal patronage of the Pandyas.


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->