அதிர்ச்சி! நேபாளில் நடந்த துயர விபத்து...! 700 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஜீப்..! - 8 பேர் பலி - Seithipunal
Seithipunal


நேபாளத்தின் கர்னாலி மாகாணம், பாபிகோட் அருகே உள்ள ஜர்மாரே பகுதியில் நடந்த சோகமான சாலை விபத்து, அந்த பகுதியையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.நேற்றிரவு, 18 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஜீப், மலைப்பாதையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென, ஓட்டுனர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, ஜீப் நேராக 700 அடி ஆழமான பள்ளத்தாக்குக்குள் விழுந்தது.

விபத்து நிகழ்ந்த தருணத்தில், வாகனம் நொறுங்கி சிதறிய காட்சி பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருந்தது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, 8 பேரின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 10 பேர் கடுமையாக காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை மிகக் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தி வரும் போலீசார், “அதிக வேகம் மற்றும் குறுகிய மலைச் சாலை தான் விபத்துக்குக் காரணம்” என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragic accident Nepal Jeep falls into 700 foot gorge 8 dead


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->