மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி: எம்பிபிஎஸ் மாணவியை சக வகுப்பு நண்பர்கள் உட்பட 03 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்..!
MBBS student gang raped by 3 people including classmates in Maharashtra
மகாராஷ்டிராவில் எம்பிபிஎஸ் மாணவி ஒரு வர சக மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பார்ப்பதற்காக குறித்த மாணவியை 02 சக வகுப்பு நண்பர்கள் உட்பட 03 அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வரும் 22 வயது மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது இரண்டு வகுப்பு தோழர்கள் மற்றும் அவர்களது நண்பர் ஒருவருடன் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்.

படம் பார்ப்பதற்கு செல்லும் முன் குறித்த மாணவியை அவர்கள் அதற்கு முன்னதாக ஒரு குடியிருப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை கொடுத்து, மாணவியை மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர் 03 பேரும் மதுவை குடித்துவிட்டு புல் போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரும், ‘நடந்த விசயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம்’ என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். பின்னர் அந்த மாணவியை அங்கேயே விட்டுவிட்டு மூன்று பேரும் தப்பியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து ஒரு சில நாட்கள் வெளியே சொல்லவில்லை என்றும், கர்நாடகா மாநிலம் பெலகாவியில் வசிக்கும் தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கடந்த 21-ஆம் தேதி விஸ்ரம்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, புனே, சோலாபூர், சாங்கிலியைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுடைய மூன்று குற்றவாளிகளையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட மூவரையும் வரும் 27-ஆம் தேதி வரை காவல் எடுத்து விசாரணை நடத்த சாங்கிலி நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
English Summary
MBBS student gang raped by 3 people including classmates in Maharashtra