சூதாட்டத்தில் மனைவியை பணயமாக வைத்த கணவன்...! பாலியல் வன்முறைக்கு பலியான பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த டேனிஷ் என்ற இளைஞருக்கு, பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்துக்கு பிறகு, டேனிஷின் வாழ்க்கை முழுவதும் குடியும் சூதாட்டமும் என்ற இரு விஷயங்களின் கீழ் முழுகிப்போனது. நாள் முழுவதும் சூதாட்டமே வாழ்க்கை எனக் கருதி, பணம் மட்டுமல்லாமல் வீட்டு பொருட்களையும் அடிவருட்டி இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூதாட்டத்துக்குத் தேவையான பணத்தைப் பெறும் நோக்கில், தன் மனைவியை அவர் வீட்டிற்குச் சென்று நகையும் பணமும் கொண்டு வரச் சொல்லி மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்தார். மனைவி மறுத்ததால் டேனிஷ் கடும் கோபத்தில் கிடந்தார்.ஒரு நாள் வழக்கம்போல சூதாட்டத்துக்குச் சென்ற டேனிஷிடம் கூட அன்றைக்கு ஒரு காசும் இல்லை. ஆனால் சூதாடாமல் அவர் இயங்க முடியாத நிலை. உடனே ஒரு கொடூர யோசனை அவரது மனதில் மின்னியது, பணத்திற்குப் பதிலாக தன் மனைவியையே பணயமாக வைப்பது.

அந்த மிருகத்தனமான முடிவை அவர் செயல்படுத்திக் கொண்டார்.ஆனால் விதி அந்த பெண்ணுக்கு எதிராகவே இருந்தது. அந்த சூதாட்டத்தில் டேனிஷ் தோல்வியடைந்தார். தோற்றவர்களிடம் அவர் தன் மனைவியை நேரடியாக ஒப்படைத்தார்.அதன்பிறகு நடந்தது சொல்லக்கூட பயங்கரம். சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். கணவரிடம் கண்ணீர் மல்கக் கூறியும் அவர் ஒரு வார்த்தை உதவவில்லை.

மாறாக, அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிஷும் தன் மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.தொடர்ச்சியான வன்கொடுமையால் பலவீனமடைந்த அந்த பெண்ணை, அவர்கள் இறுதியில் ஆற்றில் தூக்கி எறிந்தனர். நீரில் போராடிக் கொண்டிருந்த அவரை, அங்கு சென்ற பொதுமக்கள் கவனித்து மீட்டு உயிர் காப்பாற்றினர்.

போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த அந்த இளம்பெண், இந்த கொடூர துயரத்தின் பின்னணி குறித்து முழுமையாக விளக்கியுள்ளார். அதில், தன் மாமனார் மற்றும் இன்னும் இரண்டு பேர் தன்னிடம் பாலியல் வன்முறை செய்ததாகவும், வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை வேறு விதமாகத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த கொடுமையான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband gambled his wife away Shocking confession woman who victim harassement


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->