மகளை ஆணவக் கொலை செய்த தந்தை...! - உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்...!
Father who killed his daughter honor killing Inspector who accomplice dismissed Father who killed his daughter honor killing Inspector who accomplice dismissed
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவமாக, மாசர்லா பகுதியைச் சேர்ந்த வியாபாரி சந்திர சீனுவின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது. அவரது 22 வயதான மகள் சவுடேஸ்வரி, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டது குடும்பத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்த உறவை ஏற்க முடியாமல் இருந்த சந்திர சீனு, தனது மகளை ஆணவக் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து சந்திர சீனுவை கைது செய்தனர்.
ஆனால், விசாரணை மேலும் தீவிரமடைந்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. மாசர்லா நகர இன்ஸ்பெக்டராக இருந்த வெங்கட்ரமணா, இந்த கொலைக்குச் துணைபுரிந்தது உறுதியாகியுள்ளது.
சவுடேஸ்வரி வயது வந்தவர் என்பதும் தெரிந்திருந்தபோதிலும், அவரை பலவந்தமாக பெற்றோரிடம் ஒப்படைத்ததாக தெரியவந்துள்ளது. இதற்காக சந்திர சீனு, வெங்கட்ரமணாவுக்கு பெரும் தொகை பணம் வழங்கியதாகவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வெங்கட்ரமணா மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராவ் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Father who killed his daughter honor killing Inspector who accomplice dismissed Father who killed his daughter honor killing Inspector who accomplice dismissed