ஆபாச செயலியில் வலை! சென்னை தொழிலதிபரை மிரட்டி கொள்ளையடித்த 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கும்பல் கைது!
Chennai Crime TN Police
சென்னையில் ஜவுளிக்கடை உரிமையாளரை மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் சிறுமி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வியாசர்பாடி எம்.கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்த ஹித்தேஷ் (26), ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சமீபத்தில், அவரது பெற்றோர் பெங்களூரு சென்றிருந்ததால் அவர் வீட்டில் தனியாக இருந்தார். தனிப்பட்ட தேவைக்காக, ஆபாச செயலி ஒன்றில் நேரிடை உறவுக்காக சிலரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 14ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய குழு ஹித்தேஷின் வீட்டுக்கு வந்தது. தற்காலிக நெருக்கம் ஏற்பட்ட பிறகு, ஹித்தேஷை தாக்கிய அவர்கள், குளியலறையில் கட்டிப்போட்டு 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பினர்.
விவரங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி ஜெயந்திநாதன் (34), அவரது மனைவி எஸ்தர், அம்பத்தூரைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் (34), மற்றும் 17 வயது சிறுமி கைது செய்யப்பட்டனர்.
மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்ததாகவும், அவர்களை இந்த குமபல் வீடியோவால் மிரட்டி வந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.