துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு : வரும் 17-ஆம் தேதி பாஜ குழு கூட்டம்..!
BJP committee meeting on the 17th regarding the selection of the Vice Presidential candidate
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்ட்ம்பர் 09 இல் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், அன்றைய தினமே ஓட்டுக்கள் எண்ணிக்கை நடைபெற்றவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிண்ட நிலையில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், இந்தப் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியாகவில்லை. தேஜ கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்ய எதிர்வரும் 17-ஆம் தேதி பாராளுமன்றத்தில் குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில், டில்லியில் பாஜ தலைவர் நட்டாவை சந்தித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
English Summary
BJP committee meeting on the 17th regarding the selection of the Vice Presidential candidate