மதுரை அருகே அதிர்ச்சி: கணவனை இழந்த மகளை திருமணம் செய்த மருமகன்: கார் மோதி கொலை செய்துள்ள கொடூர மாமனார்..!
A father in law killed his son in law by hitting his widowed daughter with a car near Madurai
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். வயது 21. தும்பை பட்டி ராகவி என்ற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை விட வயது குறைந்த சதீஷ் காதலித்து திருமணம் செய்ததால் ராகவியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகள் ராகவி வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்று விட்டதாக மேலூர் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் அழைப்பின் பேரில் நேற்று இரு தரப்பினரும் விசாரணைக்கு வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடரவே இரு தரப்பினரையும் போலீசார் இன்று விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது, சதீஷ்குமார் தனது மனைவி ராகவியை டூவீலரில் அழைத்துச் சென்றார். அப்போது, அய்யாபட்டி விலக்கு அருகே டூவீலர் சென்றுள்ளது. ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று டூவீலர் மீது மோதி தாக்கியதில் சதீஷ்குமார் இறந்துள்ளார். விபத்தில் ராகவி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
A father in law killed his son in law by hitting his widowed daughter with a car near Madurai