விவாகரத்து வழக்கின் நடுவே பரபரப்ப! கோர்ட்டை கலக்கிய கணவனின் கொடூரத் தாக்குதல் முயற்சி...!
Amidst divorce case husbands brutal attack attempt shaken court
கொப்பல் மாவட்டம் கரடகி தாலுகா சித்தாப்பூரை சேர்ந்த சிரஞ்சீவி (29) மற்றும் அவரின் உறவினரான ஹலேகுமதா கிராமத்தை சேர்ந்த ரோஜா (27), 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் சில மாதங்களாக சிரஞ்சீவி கடுமையான மதுபோதைக்கு அடிமையாகி, வீட்டிற்கு வந்து மனைவியை சந்தேகித்து அடித்து துன்புறுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பங்களும் பலமுறை சமரசம் செய்ய முயன்றாலும், தகராறு தொடர்ந்தே வந்தது.

இதை தாங்க முடியாமல், ரோஜா இரண்டு மாதங்களுக்கு முன் தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று, அவர்களின் உதவியுடன் கொப்பல் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான மனுவை தாக்கல் செய்தார். இதைக் கேட்ட சிரஞ்சீவி கோபம் குமுறிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விசாரணை நாளன்று, இருவரும் கோர்ட்டில் ஆஜராகும் போது, சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சிரஞ்சீவி கட்டுக்கடங்காத கோபத்தில், பெட்ரோல் பாட்டிலை எடுத்து, கோர்ட்டு வளாகத்தில் இருந்த தனது மாமனார் சங்கரப்பா, மாமியார் சாந்தம்மா மற்றும் மனைவி ரோஜா மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான இந்த செயலுக்கு முன், அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் திடீரென தலையிட்டு சிரஞ்சீவியை கட்டுப்படுத்தினர். தகவல் அறிந்த புறநகர் போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.
ரோஜா அளித்த புகாரின் பேரில், சிரஞ்சீவி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கோர்ட்டு வளாகத்திலேயே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
English Summary
Amidst divorce case husbands brutal attack attempt shaken court