கொடூரம் சம்பவம்! சிவகங்கையில் பாஜக நிர்வாகியை அடித்து கொ**லை செய்த மர்ம கும்பல்! வீதியில் நடக்க மக்கள் அச்சம்!
A mysterious gang beat and killed a BJP executive in Sivagangai
சிவகங்கை நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பா.ஜ.க. வர்த்தகப் பிரிவு தலைவர் சதிஷ் மர்மக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே, வாகன பழுது நீக்கும் கடையை நடத்தி வந்தவர் சதிஷ். வழக்கம்போல் கடை பணிகளை மேற்கொண்டிருந்த அவர் மீது நேற்றிரவு மர்ம கும்பல் திடீரென தாக்குதல் நடத்தி, அடித்து கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதிஷ் உடல், காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு, அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக ஐந்து பேருக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலை, அரசியல் கோணம் உள்ளதா அல்லது தனிப்பட்ட விரோதத்தால் நடந்ததா என்பதை விசாரித்து வரும் போலீசார், குறுகிய காலத்திலேயே உண்மையை வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
English Summary
A mysterious gang beat and killed a BJP executive in Sivagangai