எல்லாம் ரெடி.. வலிமை படம் குறித்து அட்டகாச அறிவிப்பு.! யுவன் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


தல அஜித்தின் வலிமை திரைப்படம் கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டது. பத்து நாட்களில் படப்பிடிப்பு முடிய உள்ளதால் பட குழுவினரும் ரசிகர்களும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனராம். ஆனால், தல அஜித் அவசரமே இல்லாமல் பொறுமையாக இருந்து வருகின்றார். 

நீண்ட நாளுக்குப் பின்னர் படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே, இந்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதில் அஜித் கவனமாக இருக்கிறாராம். முதல் முறையாக படம் ரிலீஸ் விவகாரங்களில், அஜித் தலையிட்டு வருகிறாராம். 

இந்த நிலையில், வலிமை படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளதாகவும்.. அத்துடன் படம் வெளியாகி ஒரு மாதத்தில் OTT-யில் படம் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாகவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பாடல்களை வெளியிட தயார் நிலையில் நாங்கள் இருக்கிறோம் எனவும், அடுத்ததாக்க படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க உள்ளோம் என்று யுவன் சங்கர் ராஜா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yuvan speech about Valimai movie update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->