X வீடியோஸ் படத்தில் நடித்ததால், X வீடியோவில் நடித்தாகவே எடுத்துக்கொண்டனரா..? நடிகை ரியாமிகா தற்கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.!
ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை சென்னை வளசரவாக்கத்தில் தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை சென்னை வளசரவாக்கத்தில் தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
'அகோரி', 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' ஆகிய படங்களில் நடித்தவர் ரியாமிகா. இவர் வளசரவாக்கத்தில் ராதாநகர் பகுதியில் வாடகை வீட்டில் தனது சகோதரர் பிரகாஸுடன் வசித்து வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு தாய், தந்தை இல்லை. சென்னையிலேயே தங்கி சினிமா துறையில் வாய்ப்பு தேடி வந்தார். சில படங்களில் நடித்தும் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வராமல் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் ரியாமிகா தங்கியிருந்த அறை நேற்று காலையில் வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் சகோதரர் பிரகாஷ் மற்றும் காதலர் தினேஷ் ஆகியோர் கதவை நெடு நேரமாக தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை.
இருவரும் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இருவரும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தபின் விரைந்து வந்த போலீசார், அந்த அறையின் கதவை உடைத்து ரியாமிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நடிகை ரியாமிகாவின் இறப்பு குறித்து முதல்கட்ட விசாரணை செய்தபோது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்ததால் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது.
இது ஒருபுறமிருக்க `எக்ஸ் வீடியோஸ்' என்ற படத்தில் நடித்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களே அவரை சமீப காலமாக சந்தேக பார்வையுடன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. விழிப்புணர்வு படம் என்று நினைத்து நடித்துவிட்டு வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களிடம் கூட தலைகாட்ட முடியாத நிலையில் இருந்துள்ளார்.
படவாய்ப்பு இல்லாமை, சமூக புறக்கணிப்பு, குடும்ப சூழல் என்று இப்படி பல நெருக்கடிகள் ஒரே நேரத்தில் மனதை சூழ்ந்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.