படப்பிடிப்பில் தாமதம்: திட்டமிட்டபடி வெளியாகுமா 'விடுதலை 2'? - Seithipunal
Seithipunal


வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்த திரைப்படம் விடுதலை. 

இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சிறுமலை பகுதிகளில் படமாக்கப்பட்டதில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. 

மேலும் இந்த பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் கடந்த 1960களில் நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதாகவும் இருவரின் தோற்றத்தை இளமையாக காட்ட டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் பனிமூட்டம் மற்றும் இதர காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் திட்டமிட்டபடி இந்த திரைப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viṭutalai 2 Release update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->