லாரன்ஸூடன் போட்டி போடும் விஷால்.. மார்க் ஆண்டனி படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. 

இதில், மார்க் ஆண்டனி திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 

மேலும், இந்த படத்தில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இதில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து 'மார்க் ஆண்டனி' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இதனிடையே சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விஷாலின் மார்க் ஆண்டனி  திரைப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal in Mark Anthony movie release on September 19


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->