ஓபன் செய்யப்பட்ட விக்ரம் டிக்கெட் புக்கிங்.! வெறித்தனமாக வாங்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், ஷிவானி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் 'பத்தல..பத்தல' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகியது.

விக்ரம் படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது. ஓபன் செய்யப்பட்ட 5 மணி நேரத்திலேயே முதல் நாள் டிக்கெட் புக்கிங் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளது. ரசிகர்களின் இந்த ஆர்வம் படத்தை பயங்கரமாக வசூல் செய்ய வைத்துவிடும் என்று படக்குழு நம்புகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vikram movie ticket booking starting 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->