இஸ்ரேல்–ஈரான் போர்நிறுத்தம்: 12 நாள் போர் முடிவுக்கு வந்தது-டிரம்ப் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்த இஸ்ரேல்–ஈரான் மோதல், தற்போது போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் முடிவடைந்துள்ளது என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி, இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் ஈரானின் அணு ஆயுத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.இதற்குப் பதிலளித்து, ஈரானும் தாக்குதல் நடத்தி, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் பெருகியது.

பின்னர், அமெரிக்கா ஈரான் மீது, பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய முக்கிய அணு உலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதலுக்கு ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, “அமெரிக்கா இதுவரை எதிர்கொண்டதில்லை எனும் அளவிலான பேரழிவை சந்திக்கும்” என எச்சரித்தார்.பல உலக நாடுகள் இதனை விமர்சிக்க, சிலர் நடுநிலையாக செயல்பட்டனர்.

போர்நிறுத்த அறிவிப்பு: டிரம்ப் ட்ரூத் சோசியல் பதிவு,டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி:ஈரான் முதற்கட்டமாக போர்நிறுத்தத்தில் இணைகிறது,பின்னர் இஸ்ரேல் 12 மணி நேரத்துக்குள் அதனை பின்பற்றுகிறது,24 மணி நேரத்துக்குள் முழுமையான போர்நிறுத்தம் அமலுக்கு வருகிறது,இதனுடன், 12 நாட்கள் நீண்ட இஸ்ரேல்–ஈரான் மோதல் முடிவுக்கு வருகிறது.

மேலும் “போர்நிறுத்த காலத்தில் இரு நாடுகளும் அமைதியாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பகைமைகள் மறைந்து, இந்த முடிவு உலகத்திற்கே ஒரு பாடமாக அமையட்டும்” என டிரம்ப் குறிப்பிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel–Iran ceasefire 12-day war has come to an end Trump announces


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->