நடிகையின் இறப்பில்.. பணமின்றி தவித்த குடும்பம்.. முதல் ஆளாய் களமிறங்கிய விஜயகாந்த்.!
Vijayakanth Helps To Theni Kunjarammal family
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய மது பழக்கத்தால் இவரது உடல் நலம் என்று பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. மேலும் அரசியலிலும் அவரால் சாதிக்க முடியாமல் போனது.
இருப்பினும் தனது பிறந்தநாள் மற்றும் விசேஷ நாட்கள் என்று ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரையும் அடிக்கடி சந்திக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை என்றாலும் கூட அவரை காண்பதற்கே அவ்வளவு கூட்டம் கூடுகிறது.

விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுபோல வறுமையில் வாடும் திரைத்துரை பிரபலங்கள் பலருக்கும் அவர் உதவி செய்து வருகின்றார். பாடகியும் நடிகையுமான தேனி குஞ்சரம்மாள் உயிர் இழந்தபோது அவருடைய இறுதிச்சடங்கு கூட பணம் கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் தவித்துள்ளனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த் பிரபல நடிகரான மீசை ராஜேந்திரனை அழைத்து அவரது இறுதிச் சடங்குக்கு பணம் கொடுக்கச் சொல்லி கொடுத்து அனுப்பி இருக்கிறார். இது பற்றி மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூட தெரிவித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vijayakanth Helps To Theni Kunjarammal family