விஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த்.! அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா?!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்தான் மதகஜராஜா. இந்த திரைப்படத்தில் வரலட்சுமி மற்றும் அஞ்சலி என்று இரண்டு நாயகிகள் நடித்து இருப்பர். எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. 

ஆனால், அப்போது படத்தை தயாரித்த ஜெமினி பிலிம்ஸ்க்கு கடன் பிரச்சனை இருந்ததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது விஷாலுக்கு தன்மானப் பிரச்சினை என்பதால், படத்தை தனது சொந்த செலவில் ஆவது வெளியிட வேண்டும் என்று அவர் முயற்சிகளை மேற்கொண்டார். 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் விஜயகாந்த் உடனடியாக விஷாலை அழைத்து, "அடுத்தவர்களின் கடனை சொந்த தோளில் சுமப்பது உன் தலையை நீயே கொடுத்துக் கொள்வதைப் போன்றது. உனது மரியாதையும், பணமும் பறிபோகும்." என்று தனது சொந்த அனுபவங்களை வைத்து விஷாலுக்கு அறிவுரை கூறினார். 

இதைக்கேட்ட, விஷால் சொந்த செலவில் மதகஜராஜா படத்தை வெளியிடும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார். இதனால், விஜயகாந்த் விஷாலுக்கு சில கோடிகளை காப்பாற்றி கொடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth advice to vishaal 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal