33வது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்.. வைரலாகும் புகைப்படம்.!
Vijayakant and premalatha 33rd wedding anniversary
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் அரசியலில் இருந்து விலகி உள்ளார். இந்த நிலையில் இன்று தனது 33 வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
இதனையடுத்து திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் பிரேமலதா தம்பதியினர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பிரேமலதா சகோதரர் சுதீஷ், விஜயகாந்த், அவர்களின் மகன் சண்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகரன் ஆகியோர் இருக்கின்றனர்.

மேலும் விஜயகாந்தின் திருமண நாளையொட்டி நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சந்திரசேகர் என் உயிரை சந்தித்தபோது என பதிவிட்டுள்ளார்.
English Summary
Vijayakant and premalatha 33rd wedding anniversary