போடு வேற லெவல்! பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ட்ரெய்லர்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகி  அனைவரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள 'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பது ட்ரெய்லர் மூலமே தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒரு சலூன் கடைக்குள் ஆழ்ந்த சிந்தனையுடன், காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிய நிலையில், அதற்கு சற்றும் குறையாமல் தற்போது ட்ரெய்லர் வெளியாகி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெய்லரில் படத்தின் ஒரு சில விஷயங்களை விவரித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி சலூன் கடை வைத்துள்ளார். அவரின் வீட்டில் உள்ள 'லட்சுமி' காணாமல் போனது என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

ஆனால் அந்த லட்சுமி பணமா, நாகையா, பொருளோ, பெண்ணா? யார் என்று சஸ்பென்ஸ் ஆகவே ட்ரைலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அந்த லட்சுமி கேஸ் என்று வசனம் நறுக்.

மேலும், அதிரடி சண்டை காட்சிகளும், யார் இந்த லட்சுமி என்ற சஸ்பென்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால் நிச்சயமாக இது ஒரு வெற்றி படமாக அமையும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi Maharaja Vijay Sethupathi 50 Nithilan Swaminathan


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?




Seithipunal
--> -->