விஜய்யுடன் மல்லுக்கட்டும் விஜய் சேதுபதி..! அப்ப தீபாவளிக்கு ரிலீஸ் இல்லையா?.!!
vijay sethupathi clash with vijay
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய்யும், விஜய் சேதுபதியும் ஒரே நேரத்தில் மோத இருக்கிறார்கள். தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது பிகில் படம். இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.
விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்ததும்., படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றி அமைக்க கூறியும் ட்விட்டரில் சண்டையிட்டு வருகின்றனர். மேலும்., விஜய் சேதுபதி ரசிகர்கள் தரப்பிலும் தக்க பதிலடி வழங்கப்பட்டு வருவதால் படக்குழுவினர் என்ன செய்வதென்று யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
vijay sethupathi clash with vijay