திடீரென பிரபல விஜய் பட இயக்குனர் மரணம்.! சோகத்தில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாபு சிவன் திடீரென மரணமடைந்தார். இவர் ஆரம்பகட்டத்தில் இயக்குனர் தரணி உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர், விஜய் கதாநாயகனாக வைத்து 2009ஆம் ஆண்டு வேட்டைக்காரன் இந்த திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. 

இப்படத்தில் விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இயக்குனர் பாபு சிவன் வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. வேட்டைக்காரன் படம் தோல்வி அடைந்ததால் தான் பாபு சிவன் அடுத்த படத்தை இயக்கவில்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பாபு சிவன், சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராசாத்தி என்ற சீரியலை இயக்கி வருகின்றார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மயங்கி விழுந்த பாபு சிவனை ராஜீவ்காந்தி அரசு 
 மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த இரண்டு நாட்களாக மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பாபு சிவனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்ததாகவும் மருத்துவர் தெரிவித்ததையடுத்து, திடீரென அவர் மரணம் அடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay movie director babu sivam passed away


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->