பிரபல பாடகர் நண்பருடன் காரில் சென்ற போது விபத்து.! அதிர்ச்சியில் திரையுலகம்.!
vijay jesudhas car accident
பிரபல பாடகரான விஜய் ஜேசுதாஸ் நேற்று இரவு தன்னுடைய நண்பருடன் காரில் பயணம் செய்த பொழுது மற்றொரு கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்து இருக்கின்றது. இது குறித்து, தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட இடத்தில் கார்களை அப்புறப்படுத்தி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பருடன் வேறு காரில் கிளம்பி இருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. விஜய் ஜேசுதாஸ் பிரபல பாடகர் ஜேசுதாஸின் மகன் ஆவார். மாரி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
vijay jesudhas car accident