LIK படத்தை ரிலீஸ் பண்ண பாடாய்ப்படும் விக்னேஷ் சிவன்.. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் அப்டேட்
Vignesh Shivan to release LIK movie Love Insurance Company release update
லவ் டுடே படத்தின் மூலம் இயக்குநராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். அவரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கத் தொடங்கிய படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தின் பணிகள் நீண்ட காலமாக முடிவடையாமல் இருப்பதால், படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் மற்றும் டியூட் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி, இரண்டும் வசூல் ரீதியாக 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மட்டும் இன்னும் ரிலீஸ் ஆகாததால், விக்னேஷ் சிவன் மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் நடித்த ஒரு விளம்பரம் வெளியாகி, அது சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த விளம்பரத்தில் லுங்கி கட்டிக்கொண்டு, வீட்டில் சமையல் செய்யும் கணவராகவும், மனைவி நயன்தாரா போனில் உத்தரவு போடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த நெட்டிசன்கள், விக்னேஷ் சிவனை நகைச்சுவையாக ட்ரோல் செய்து வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகும் நயன்தாராவிடம் கோபப்பட முடியாத நிலை என பலரும் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பதால் தான் விளம்பரங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
ட்ரோல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் தற்போது சென்சார் பணிகளுக்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்சார் சான்றிதழ் கிடைத்ததும், வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரதீப் ரங்கநாதனும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு படம் வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
English Summary
Vignesh Shivan to release LIK movie Love Insurance Company release update