துருவ் விக்ரமை வைத்து, காதல் சொட்ட சொட்ட படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோலிவுட்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவின் போடா போடி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தான் இயக்கினார். தற்போது நயன்தாரா மற்றும் சமந்தா விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். 

இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன்  இயக்குனர் மட்டுமல்லாமல் நயன்தாராவுடன் சேர்ந்து நிறைய படங்களை தங்களது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.‌ 

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திரைப்படம் காதலை மையப்படுத்தி ரொமான்டிக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஆதிர்ய வர்மா போல இது 18+ மூவியாக இருக்குமோ என்ற எண்ணத்தை ரசிகர்களுக்கு ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh Shivan love movie Druv Vikram


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal