விஜய்யின் 'தளபதி 68' திரைப்படம் சும்மா தெறிக்க போகுது.. இயக்குனர் கொடுத்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் , தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக வெங்கட் பிரபு முதன்முறையாக கூட்டணி அமைக்கிறார். இந்த நிலையில் நடிகர் இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை 11 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாகும் என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் தளபதி 68 படத்தின் அப்டேட் என நினைத்து காத்திருந்த நிலையில், இன்று வெங்கட் பிரபு நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அப்டேட்டை வெளியிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதில், விஜய் ரசிகர் ஒருவர் தளபதி 68 படம் குறித்து கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு, 'தளபதி 68 சும்மா தெறிக்கும் காத்திருங்கள்' என பதிலளித்துள்ளார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இந்த கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venkat Prabhu tweet about thalapathy 68 movie


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->