வெளியானது வீர தீர சூரன் படத்தின் டீசர்.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு. துஷரா விஜயன், சித்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. 

இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகின. படத்தில் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

veera theera sooran movie teaser released


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->