வாழை திரைப்படம் : மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று பாராட்டி உணவு உண்ட திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள  ‘வாழை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், ஜெய் சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கிடையே இந்த படம் திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியானது. படத்தை பார்த்த பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டி நெகிழ்ந்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், வாழை படத்தை பார்த்த விசிக கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாரி செல்வராஜின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறினார். குடும்பத்தார் மற்றும் படத்தில் சிறுவர்களாக நடித்த இருவருக்கும் திருமாவளவன் சால்வை அணிவித்து பாராட்டினார்.

மேலும் மாரி செல்வராஜின் இல்லத்திலேயே அவர்களின் குடும்பத்தாரோடு சேர்ந்து வாழை இலையில் உணவும் உண்டார். இந்நிலையில்,  விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வந்து வாழ்த்தியது, தனது இதயத்தை இறுகப் பற்றிக்கொண்டதாக சமூகவலைத்தளத்தில் மாரி செல்வராஜ் 
தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vazhai Movie Thirumavalavan went to Mari Selvarajs house and ate the food


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->