முன்னாள் மனைவியுடன் சேர்ந்து, சரத்குமார் தீவிரம்.. ஹைதராபாத்தில் இருந்து திரும்பும் வரலட்சுமி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தவர்தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமீபகாலமாக இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். 

எனவே சென்னையை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் சென்று தங்கி விட்டார். அங்கே தான் அவர் சமீப காலமாகவே வசித்து வருகின்றார். இவருக்கு காதல், திருமணம் என்று அடிக்கடி கிசுகிசுக்கள் கிளம்பும். இத்தகைய சூழலில் அவருக்கு உண்மையாலுமே திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறிய வரலட்சுமி.! கண்ணிமைக்காமல் ரசிக்கும்  நெட்டிசன்கள்.! - Seithipunal

வரலட்சுமிக்கு பின் அவருடைய தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதால், கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வரலட்சுமி இருக்கிறார். எனவே திருமணத்திற்கு அவர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உடனே நல்ல மாப்பிள்ளையை தேட வேண்டும் என்று சரத்குமார் தேடி வருகின்றாராம். அத்துடன் வரலட்சுமியின் தாய் சாயாவும் அவருக்காக மாப்பிள்ளை தேடி வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஹைதராபாத்தில் வசித்து வரும் வரலட்சுமி விரைவில் சென்னைக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

varalakshmi sarathkumar may getting marry soon


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->