"நயன்தாரா என்றதும் பொங்குகிறார்கள் .. அது பெரிய விஷயமில்ல" - வரலக்ஷ்மி வக்காலத்து.!
varalakshmi about nayanthara babies
நடிகை வரலட்சுமி சரத்குமார் சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தில் வாடகை தாய் ஏற்பாடு செய்கின்ற மருத்துவமனையின் சேர்மனாக நடித்திருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "இது போல கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய ஆச்சரியமாக தோன்றியது.
இதை இயக்குனர்களிடமும் நான் கேட்டேன். கதையின் போக்கில் மட்டும்தான் எனது எதிர்மறை தன்மை இருக்கும். சமந்தாவுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு மிக ஆர்வத்தை கொடுக்கும் விஷயமாக இருக்கும். எனக்கு சமந்தாவை போல பெரிய ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லை.

மிக அமைதியான கதாபாத்திரம் தான். நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது சவாலாக எடுத்து அதை திறமையுடன் வெளிப்படுத்துவேன். சமந்தாவுக்கு இணையாக படத்தில் எனது கேரக்டரும் பயணிக்கும். அவளுக்கு உதவி வேண்டும் என்ற போது தான் எனது கதாபாத்திரம் உள்ளே வரும்.
இந்த கதை அறிவியல் புனைவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இது வாடகைத்தாய் சரியா? தவறா? என்பதை விவாதிக்க கூடிய படம் அல்ல. மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை சமூகத்தில் உணர்த்துவது தான் படத்தின் நோக்கம்." என்கிறார்.
மேலும், "வாடகைத்தாய் விஷயம் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லை. நடிகர்களின் விவகாரம் என்றால் அதை பெரிதாக்கி காட்டி விடுவார்கள்." என்று நயன்தாரா குழந்தை குறித்து தெரிவித்துள்ளார்.
English Summary
varalakshmi about nayanthara babies