தமிழ் சினிமாவை தரம் தாழ்த்தி பேசிய வரலட்சுமி சரத்குமார்.! கொந்தளிக்கும் கோலிவுட்.?!
Varalakshmi about Kollywood
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளாகிய வரலட்சுமி சிம்புவின் போடா, போடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், இரவின் நிழல் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றின் போது நடிகை வரலட்சுமி, "தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெண்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பது இல்லை. தெலுங்கு சினிமாவில் கிடைத்த வெற்றி எனக்கு கோலிவுட் படங்களில் கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவில் நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யச் சொல்வது அதிகமாக இருக்கிறது. என்னுடைய, "கொன்றால் பாவம்" திரைப்படத்திற்கு பின்னாவது என் திறமைக்கு கோலிவுட்டில் மரியாதை கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன்."என்று கூறியுள்ளார்.
கோலிவுட் திரை உலகை தரம் தாக்கும் விதமாக பேசியுள்ள வரலட்சுமியின் இந்த செயல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Varalakshmi about Kollywood