அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் மாஸ் அப்டேட்.!

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பாலா. தற்போது இவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வணங்கான்'. இந்தப் படத்தில், அருண் விஜயுடன் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. 

இதற்கு முன்னதாக 'வணங்கான்' படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்றது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். 

அதன் பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanangan movie firstlook released today


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->