இசைப்புயல் இசையில் பாடல் பாடிய வைகைப்புயல்.. மாமன்னன் படத்தின் சூப்பர் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே, கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜின் மூன்றாவது படமாக மாமன்னன் இருக்கின்றது. எனவே, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர் வடிவேலு இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் என்றும், இது நீண்டநாள் பலரால் மறக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கும் என்றும் படக்குழு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. 

அந்த வகையில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த போஸ்டரில் வடிவேலு அரசியல்வாதி போல  காட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் மாமன்னன் படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடல் பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும் பாடல் பதிவின்போது எங்கள் அனைவரையும் சிரிக்க வைத்து மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கிக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu sing a song in mamannan movie


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->