சூர்யா - வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்த ''வணங்கான்'' படத்தில் இருந்து விலகினார்.

இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை முடித்து விட்டார் என்பதால் அடுத்து வாடிவாசலுக்கான பணியை விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டுமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vadivasal movie latest update


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->