இது என்னடா.. திரிஷாவுக்கு வந்த சோதனை.. போன வேகத்தில் திரும்பி வந்ததால் சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


தளபதி விஜயின் 67வது திரைப்படத்தில் நடிகை திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். காஷ்மீரில் லியோ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை நடைபெற்று வருகின்றது. சில நாட்களுக்கு முன் பட குழு கிளம்பி சென்ற நிலையில் மூன்று நாட்கள் முடிவில் திரிஷா சென்னை திரும்பி உள்ளார். 

இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். மேலும் சில படங்களில் ஹீரோயின்களே இருக்க மாட்டார்கள்.

அப்படியே ஹீரோயின்கள் இருந்தாலும் அவர்கள் இறந்து போவதை போலத்தான் அவர் காட்டியிருப்பார். எனவே, திரிசா இந்தப் படத்தில் ஆரம்ப காட்சிகளிலேயே கொலை செய்யப்பட்டு விடுவாரா என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் நடிகை திரிஷா இதுபோல சிறிய அளவிலான காட்சிகள் கொண்ட படத்தில் நடிக்க மாட்டார் என்றும், கதாநாயகிகளுக்கு ஓரளவாது ஸ்கோப் இருக்கின்ற படங்களில் தான் நடிப்பார் என்றும், எனவே வேறு காரணங்களுக்காக நடிகை திரிஷா சென்னை வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha Return From Thalapathy 67 movie


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->