குஷ்பூவை தொடர்ந்து, அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகை.?!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா முதன் முதலில் சிம்ரன் - பிரஷாந்த் ஆகியோர் நடித்த ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். 

அதன்பின்னர், சிம்புவின் அலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அஜித், சூர்யா, விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற படங்களாக தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை குஷ்பூ போலவே திரிஷாவும் அரசியலில் களமிறங்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஆனால் மாநில கட்சிகளில் சேராமல் தேசிய அளவிலான அரசியலை கையிலெடுக்க போவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trisha may in poltics


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->