லீக்கான திரிஷாவின் அந்த புகைப்படம்.. உற்சாகத்தில் திளைக்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய கைதி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியாகிய விஜயின் மாஸ்டர் மற்றும் கமலின் விக்ரம் போன்ற படங்களும் செம மாஸ் காட்டியது. அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து இரண்டாவது திரைப்படத்தையும் அவர் இயக்க உள்ளார். 

தளபதி 67 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், பிக் பாஸ் ஜனனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் பல வருடங்களுக்குப் பின் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றார். 

சமீபத்தில் பட குழுவினர் தனி விமானத்தின் மூலம் காஷ்மீருக்கு பறந்துள்ளனர். தற்போது திரிஷாவும் விமான நிலையத்தில் நடந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகி தளபதி 67 படத்தில் அவர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha airport photo viral on Instagram


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->