"வா மோதி பாரு" துணிவு பட அப்டேட் கொடுத்த படக்குழு.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது. அஜித்தின் AK61 என்று குறிப்பிடப்பட்ட திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. 

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் மீதமுள்ளதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில், AK61 படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியது. அதன்படி இந்த படத்திற்கு "துணிவு" என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியது. இதனை தொடர்ந்து, இன்று துணிவு படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிவடைந்துள்ளது. 

இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் ரிலீசாக இருக்கின்றது. நடிகர் விஜயின் வாரிசு படமும் பொங்கலில் ரிலீசாக இருப்பதால் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தகைய சூழலில், தயாரிப்பு நிறுவனம் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளது. "வா மோதி பாரு" என்ற பாடலை தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thunivu va modhi paru song viral 


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->