கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம்.!
Thrishyam movie remake on Korean language
பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் த்ரிஷ்யம். மலையாளத்தில் மெகா ஹிட் ஆன இந்த திரைப்படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இதில் ஹிந்தியை தவிர மற்ற மொழிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் த்ரிஷ்யம் திரைப்படம் சைனீஸ் மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்த படத்தின் உலக ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் த்ரிஷ்யம் திரைப்படம் விரைவில் கொரியன் மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Thrishyam movie remake on Korean language