எந்திரன் படத்தை நிராகரித்த அஜித்! காரணம் கேட்டால் நீங்களே மிரண்டு போவீங்க! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின்  டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவரது துணிவு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது ஏகே 62 படத்திற்கான படப்பிடிப்புகளுக்கு முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகிய அத்தனை திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் என்று கூறலாம்.

அத்தகைய மிகப் பெரிய வெற்றி இயக்குனரின் நான்கு படங்களை தல அஜித் குமார் நிராகரித்திருக்கிறார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா. ஆம் அதுதான் உண்மை. ஷங்கரின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி,  மற்றும் எந்திரன் ஆகிய நான்கு படங்களையும் அஜித் நிராகரித்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

எந்திரன் படத்தின் கதையை அஜித் நிராகரித்தார் என்பது நாம் அறிந்ததே  ஆனால் அதற்கான காரணம் தற்போது தான் வெளியாகி இருக்கிறது. எந்திரன் படத்திற்கு முன்பே சங்கரின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மூன்று படங்களையும் அஜித் நிராகரித்திருக்கிறார் என்ற உண்மையும் தற்போது தான் வெளியாகி இருக்கிறது.

அந்த செய்தியின் படி எந்திரன் படத்தின் கதையை அஜித்திடம் கூறியபோது  தனக்கு பிரம்மாண்டமான கதை எல்லாம் செட்டாகாது என்றும் தான் ஒரு சாமானியன் அதனால் சாதாரணமான திரைப்படங்களில் நடிக்கவே விருப்பப்படுவதாகவும் சங்கரிடம் அஜித் தெரிவித்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this is the reason why ajith rejects enthiran


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal