இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன! - ஏ.ஆர்.முருகதாஸ்
There so many things learn from both them AR Murugadoss
பிரபல இயக்குநர் ''ஏ.ஆர்.முருகதாஸ்'' பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் கடைசியாக அவர் இயக்கங்களில் வெளிவந்த படங்களான தர்பார் மற்றும் சிக்கந்தர் தோல்வியடைந்தது. அவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ''மதராஸி'' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தில் ருக்மினி வசந்த், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர்,விக்ராந்த், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இது அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.அண்மையில் நேர்காணலில் ஏ. ஆர். முருகதாஸ் தெரிவித்ததாவது, “ஷங்கரின் ‘இந்தியன் - 2’, ‘கேம் சேஞ்சர்’ மற்றும் மணிரத்னத்தின் ‘தக் லைப்’ உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன.
இதுபோன்ற லெஜண்ட் இயக்குநர்களின் சறுக்கல், பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்த ஒன்றுமே இல்லை.இயக்குநர்கள் மணிரத்னமும் ஷங்கரும் மிகச்சிறந்தவர்கள். இருவரின் திரைப்படங்களும் வெறும் கமர்சியலைத் தாண்டி சமூக ரீதியான சிந்தனையையும் விதைக்கும்.
இவர்கள் இறக்கத்தைச் சந்திப்பதற்குக் காரணம், அவர்கள்தான் சாலைபோடக்கூடிய ஆள்கள். அதனால், அதில் ஏற்றமும் இறக்கத்தையும் சந்திக்கின்றனர். ஒருவர் சரியாக சென்றுகொண்டிருந்தால் யாரோ போட்ட சாலையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள்.
ஆனால், மணிரத்னமும் ஷங்கரும் புதிதாக முயற்சி செய்கிறவர்கள்.அவ்வளவு எளிதாக அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன” எனத் தெரிவித்து அவர்களை பாராட்டியுள்ளார்.இது தற்போது இணையத்தில் பரவி பல கருத்துக்களை பெற்று வருகிறது.
English Summary
There so many things learn from both them AR Murugadoss