பரபரப்பு தகவல்! சுஷாந்த் சிங் மரணத்திற்கும் நான் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கும் ஆழமான தொடர்பு! -தனுஸ்ரீ தத்தா - Seithipunal
Seithipunal


ஹிந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழ் நடிகர் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்திருந்தார். இதில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.

அண்மையில் தனது வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கண்ணீருடன் புகார் தெரிவித்திருந்தார். இதனிடையே,மீண்டும் சில கருத்துகளை தெரிவித்து தனுஸ்ரீ தத்தா பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.அவர் தெரிவித்ததாவது, ''மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ஒரு படத்தில் பணிபுரிய இருந்தேன்.

ஆனால் அது முழுமையடையவில்லை. சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கும், தான் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது.இதேபோல் நடிகை பூஜா மிஷ்ராவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் என்னைச் சுற்றி விசித்திரமான சம்பவங்கள் நடைபெறுகிறது. நான் உண்ணும் உணவிலும் விஷம் கலக்க முயற்சிகள் நடந்துள்ளது. கடவுளின் அருளால் அதில் இருந்து தப்பித்து விட்டேன்'' என்று தெரிவித்தார்.இதில் தனுஸ்ரீ தத்தாவின் இந்த புகார் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There deep connection between Sushant Singhs death and harassment I am facing Tanushree Dutta


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->