மது போதையில் சிறுவர்களை தாக்கிய பிரபல பாடகரின் மகன் கைது? - Seithipunal
Seithipunal


பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி நேற்று இரவு மதுபோதையில் சிறார்களைத் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்ற இரண்டு சிறுவர்களை, மனோவின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படும் நிலையில் இந்த தாக்குதலால் அந்த 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்  பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மனோவின் மகன் மதுபோதையில் சிறுவர்களை தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மனோவின்  மகனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son of a famous singer who attacked children under the influence of alcohol was arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->