'டாப் கியரில்' ஏறும் சினிமா மார்க்கெட்... சம்பளத்தை உயர்த்தி மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால்  மார்க்கெட்டில் சற்று சறுக்கல் ஏற்பட்டது.

தற்போது நெல்சன்  இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து சூப்பர் ஸ்டாரின் மார்க்கெட் உயர ஆரம்பித்திருக்கிறது.

ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். அதன் பிறகு ஜெய் பீம் இயக்குனரான ஞானவேலுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் சுதா கொங்காரா ஆகியோருடனும் இணைந்து பணியாற்ற உள்ளதாக செய்திகள் வருகின்றன.

தற்போது இருக்கும் மார்க்கெட்டில் சூப்பர் ஸ்டார் மீண்டும் தனது இடத்திற்கு வந்து விட்டதாகவே திரையுலகில் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது சம்பளம் விஜய் கூட நெருங்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டதாகவும் கோலிவுட்லிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The market of super star went to top he rose again despite falling


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->