'தி கோட் ' திரைப்படம் வெளியானது..விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில்  நடிகர் 'தி கோட் ' திரைப்படம் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இதனை தொடர்ந்து, டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜய் இளம்தோற்றத்தில் தோன்றும் காட்சிகள் வைத்து இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாகவெளியாகி உள்ளது. தமிநாட்டை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது . 

இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Goat movie released..Vijay fans celebrate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->