லியோவில் விஜயின் ரீல் மகன் இந்த நடிகரா.? புது அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்  வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். இந்தத் திரைப்படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் களம் இறங்குகிறார்.

இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் விரைவிலேயே இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் துவங்க இருக்கின்றன. இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தளபதி ரசிகர்கள் லியோ படத்தை பற்றிய அப்டேட்டை கேட்டுக் கொண்டே இருந்தனர். அதற்கேற்றார் போல பல ஆச்சரியமான அப்டேட்டுகள்  படக்குழுவினரிடமிருந்து வந்தது.

இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு மேலும் ட்ரீட் கொடுக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியின் படி மலையாள நடிகரான  மேத்யூ தாமஸ், லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க இருக்கிறாராம். இதற்காக தாடி மீசை எல்லாம் எடுத்து ஆளே வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல லியோ திரைப்படத்திலும் இயல் என்ற கதாபாத்திரத்தை  சர்ப்ரைஸ் பேக்கேஜாக வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த செய்தியும் தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The famous actor who is going to play Vijay son has released shocking information


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->