'கடுமையான ஆன்மீக ஒழுக்கம்; சைவ உணவு மட்டுமே சாப்பாடு'; ராம் சரணின் உடலமைப்பு குறித்து புகழ்ந்த இயக்குநர்..!
The director praised Ram Charans physique achieved solely through a vegetarian diet
புஜ்ஜி பாபு சனா இயக்கிவரும் படம் `பெத்தி'. இந்த படத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இப்படம் உருவாகிவருகிறது. ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியானது. இதில் ராம் சரணின் கட்டுமஸ்தான உடலமைப்பு பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், ராம் சரண் உடலமைப்பு பற்றி கூறிய இயக்குனர் புஜ்ஜி பாபு சனா; ரேம் சரண் படத்தில் உண்மையான மல்யுத்த வீரரின் உடலமைப்பைப் கொண்டு வருவதற்காக எட்டு மாதங்கள் கிட்டத்தட்ட எல்லா நாளும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். உடல் தசைகளை மெருகேற்றுவது மட்டுமில்லை, கதாபாத்திரத்தின் உடல் மொழி, நடை என அனைத்தையும் முழுமையாக உள்வாங்க வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்காக ரேம் சரண், உடற்பயிற்சி மட்டுமல்ல, மிக கட்டுப்பாடான உணவு முறையை மேற்கொண்டார் என்றும், அதில் மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், ஐயப்பனுக்காக அவர் மாலை போட்டிருந்த நேரத்திலும் அவர் தனது உடற்தகுதியைக் கவனித்துக் கொண்டார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மாலை போட்டு இருந்ததன் காரணமாக, அப்போது கடுமையான ஆன்மீக ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தாலும், ராம் சரண் ஒரு நாள்கூட பயிற்சியை நிறுத்தவில்லை என்றும், சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு தனது உடலைச் சிறப்பாகப் பராமரித்தார். இந்த உறுதியும் ஒழுக்கமும் பலரை வியக்க வைத்தது என்று கூறி வியக்கவைத்துள்ளார்.
English Summary
The director praised Ram Charans physique achieved solely through a vegetarian diet