நெட்பிளிக்ஸ் செய்யும் மோசடியில் சிக்கிய தங்கலான்! பா.ரஞ்சித்தை நம்பி ஏமாந்த விக்ரம்! - Seithipunal
Seithipunal


நெட்பிளிக்ஸ், ஓடிடி துறையில் முன்னோடியாக செயல்பட்டு, புதிய படங்களை இப்போதே வாங்கி வைத்திருப்பது தற்காலின் முக்கியமான மாற்றமாக விளங்குகிறது.

2025 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கும் பத்து படங்களுக்கு மேல் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இது புதிய சவால்களையும் எதிர்கொள்ள வைக்கிறது.

சமீபத்தில், நடிகர் விக்ரம் நடித்த தங்களான் படம் குறித்து ஏற்பட்ட பிரச்சினை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தை 60 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டது.

ஆனால் தியேட்டர் வெளியீட்டில் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததால், அவர்கள் இப்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த தொகையை செலுத்தத் தயங்குவதாக தெரிகிறது.

நெட்பிளிக்ஸ், கார்ப்பரேட் மூலமான அணுகுமுறையால், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. நெட்பிளிக்ஸ் தரப்பில், படம் தொடர்பான சில பணி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பதையும், அதன் காரணமாக அதிக விலைக்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்து, சர்ச்சையை திசை திருப்ப முயற்சி செய்கிறது.

இந்தப் பிரச்சினை, நெட்பிளிக்ஸ் மற்றும் பெரிய படங்களின் ஒப்பந்தங்களைச் சுற்றியுள்ள சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thangalaan caught in the fraud of Netflix Pa Ranjith Vikram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->